ஜவுளி உள்ளிட்ட 12 துறைகளின் ஏற்றுமதியை உயர்த்த அரசு கூடுதல் கவனம்: பியூஷ் கோயல் தகவல்

ஜவுளி உள்ளிட்ட 12 துறைகளின் ஏற்றுமதியை உயர்த்த அரசு கூடுதல் கவனம்: பியூஷ் கோயல் தகவல்

இந்தியாவின் ஏற்றுமதியை அதி கரிக்கும் வகையில் மத்திய அரசு ஜவுளி உள்ளிட்ட 12 துறைகளில் கவனம் செலுத்தி வருவதாக மத் திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜவுளித் துறை தற்போது 3,700 கோடி டாலர் அளவில் ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில் அடுத்த பத்து ஆண்டுகளில் அதன் ஏற்று மதி மதிப்பை 10,000 கோடி டால ராக உயர்த்தும் அளவிலான ஆற் றலை ஜவுளித் துறை கொண்டிருப் பதாக அவர் கூறினார். சேவைத் துறைகளின் ஏற்றுமதி குறிப்பிடத் தக்க அளவில் உயர்ந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியா ஏற்று மதி தொடர்பாக மிகுந்த திட்டமிட லுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதத்தில் 1.8 சதவீதம் குறைந்து 27.36 பில்லியன் டாலராக உள்ளது. குறிப்பாக பெட்ரோலியம், பொறியியல் பொருட்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரி வைக் கண்டுள்ளன. அதேபோல், இறக்குமதியும் டிசம்பர் மாதம் 8.83 சதவீதம் சரிந்து 36 பில்லியன் டால ராக உள்ளது. தங்கம் இறுக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள் ளது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 1.96 சதவீதம் சரிந்து 239 பில்லியன் டாலராக உள் ளது. அதேபோல் இறக்குமதியும் 8.9 சதவீதம் குறைந்து 357.9 பில்லியன் டாலராக உள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு உற்பத் தியை அதிகரித்து, ஏற்றுமதி அளவை உயர்த்தும் முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வரு வதாக அவர் தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )