கரோனா வைரஸ் பரவும் அச்சத்தில் அமெரிக்கா: பங்குச்சந்தை சரிவு

கரோனா வைரஸ் பரவும் அச்சத்தில் அமெரிக்கா: பங்குச்சந்தை சரிவு

சீனாவிலிருந்து பரவும் கொடிய வைரஸான கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவுக்கும் பரவியுள்ளதாக செய்திகள் பரவியதை அடுத்து அதன் காரணமாக எழுந்த அச்சத்தினால் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை மளமளவென சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வால் ஸ்ட்ரீட்டில் மூன்று பங்குகளே உச்சத்தில் இடம்பிடித்து வருகின்றன. அதன் பங்கு குறியீடுகள் முதலீட்டாளர்களின் கவலைக்கிடையே நேற்று மளமளவென சரிந்தது.

டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 152.06 புள்ளிகள் குறைந்துவிட்டது. சதவீதத்தில் 0.52 குறைந்து 29,196.04 புள்ளிகளாகக் குறைந்துவிட்டது. அதற்கு அடுத்த இடத்தில் இருந்த எஸ் அண்ட் பி 500 8.83 புள்ளிகள் குறைந்துவிட்டது. சதவீதத்தில் 0.27 ஆக 3,320.79க்கு சரிந்துவிட்டது. மூன்றாவது இடத்தில் இருந்த நாஸ்டாக் கலப்பு குறியீடு 18.14 புள்ளிகள் குறைந்துவிட்டது. சதவீதத்தில் 0.19 ஆகக் குறைந்து 9,370.81க்கு மாறியதாக சினுவா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒரு புதிய வகை கரோனா வைரஸ் குறித்த கவலைகளுக்கு மத்தியில் ஹோட்டல் மற்றும் விமானப் பங்குகளும் சரிந்துள்ளன. வின் ரிசார்ட்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் சாண்ட்ஸ் 6.14 சரிந்தது. அவை முறையே 5.4 சதவீதம். யுனைடெட் ஏர்லைன்ஸ் 4.36 சதவீதமும், டெல்டா ஏர் லைன்ஸ் 2.72 சதவீதமும் சரிந்தன.

நேற்று முன்தினம் ஐஎம்எஃப் பொதுவான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பொருளாதார முன்னணியில், சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறைந்துவருதாக ஒரு எதிர்மறை கணிப்பை வெளியிட்டது.

வளர்ந்து வரும் ஒரு சில சந்தைகளில் ஆச்சரியங்கள், குறிப்பாக இந்தியாவில், நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அங்கு சமூக அமைதியின்மை அதிகரித்து வருவதால் ஏற்பட்டுவரும் இந்த மாற்றம், பொதுவாக உலகளாவிய வளர்ச்சி வீழ்ச்சிக்குமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவில் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவுக்கு இந்தியாவின் மாறுதல்கள் காரணமல்ல, சீனாவிலிருந்து பரவும் கொடிய கரோனா வைரஸ்தான் என்று கூறப்படுகிறது. சீனாவில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ள நிலையில் அமெரிக்காவிலும் இந்த கொடிய வைரஸ் பரவும் என்ற அச்சம் அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை மளமளவென சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சினுவா செய்தி ஊடகம் கூறுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )