இரும்புத் தயாரிப்புகளுக்கு அதிக வரி விவகாரம்: இந்தியாவுடன் சுமுகத் தீர்வை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு

இரும்புத் தயாரிப்புகளுக்கு அதிக வரி விவகாரம்: இந்தியாவுடன் சுமுகத் தீர்வை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புத் தயாரிப்புகளுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்து வந்த விவகாரத்தில், தற்போது இருநாடுகளும் பிரச் சினையை சுமுகமாக தீர்க்க முன்வந்துள்ளன.

உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறி, அமெரிக்க அரசு இந்திய இரும்புத் தயாரிப்பு களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்து வந்தது.

இதை எதிர்த்து 2012-ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் தீர்வு மையத்திடம் இந்தியா முறையிட்டது. அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அவ்வமைப்பு, அமெரிக்கா டபிள்யூடிஓ-வின் விதிகளை மீறி இருப்பதை உறுதி செய்து, அமெரிக்கா வர்த்தக விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 ஏப்ரல் வரை காலக்கெடுவும் அளித்தது.

ஆனால், அமெரிக்கா அந்த உத்தரவைப் பின்பற்றாமல், தொடர்ச்சியாக இந்திய இரும்புத் தயாரிப்புகளுக்கு அதிக வரி விதித்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் உத் தரவை முழுதாக நிறைவேற்ற வில்லை என்றும், ஒப்பந்த விதி களை தொடர்ந்து மீறி வருவ தாகவும் 2017-ல் இந்தியா மீண் டும் குற்றம்சாட்டியது.

இவ்விவ காரம் தொடர்பாக, கடந்த ஆண்டு அமெரிக்கா மேல்முறையீடு செய் தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இவ்விரு நாடுகளும் சுமுகத் தீர்வை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளன. கடந்த ஆறு வருடங்களாக நீடித்து வந்தப் பிரச்சினை தற்போது தீர்வை நோக்கி நகர்ந்துள்ளது.

இரும்புப் பொருட்கள் மீது வரி விவகாரம் மட்டும் இல்லாமல், உலக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் இடையே பல முறை மோதல் ஏற்பட்டு உள்ளது.

முந்தைய மோதல்

டபிள்யூடிஓ எனப்படும் உலக வர்த்தக அமைப்பு, உலக நாடு களிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் பொருட்டு 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்த சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அந்த பட்டியலில் உள்ள நாடுகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரிச் சலுகை போன்றவை வழங்கப் படுகிறது. தவிர அந்நாடுகளும் அதன் ஏற்றுமதியை அதிகரிக்க உள்நாட்டுக்குள் சலுகை திட்டங் களை வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அவ்வகையாக, இந்தியா அதன் உள்நாட்டு ஏற்றுமதியை அதிகரிக்க சில சலுகை திட்டங்களின் வழியே ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி வந்தது. இந்நிலையில், இந்தியா வர்த்தக விதிமுறைகளை மீறி சலுகைத் திட்டங்களை கடைபிடித்து வருகிறது. இதனால் உலகளாவிய சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கின்றன என்று அமெரிக்கா உலக வர்த்த அமைப்பிடம் புகார் அளித்தது.

அதை விசாரித்த உலக வர்த்தக அமைப்புக் குழு, இந்தியா வர்த்தக விதியை முறையாக கடைபிடிக்க வேண்டும். தற்போது கடைபிடித்து வரும் சலுகைத் திட்டங்களை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரும்பு இறக்கு மதி வரி தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே சுமுகம் ஏற்பட்டு இருப்பது நேர்மறை அம்சமாக பார்க்கப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )