இந்தியாவில் 50  நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பியது வால்மார்ட் நிறுவனம்

இந்தியாவில் 50 நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பியது வால்மார்ட் நிறுவனம்

உலகிலேயே பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் தனது 50 நிர்வாகிகளை பணி நீக்கம் செய்துள்ளது, அதாவது மறு அமைப்பாக்கக் காரணங்களுக்காக இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனது மொத்த விற்பனையை விரிவாக்கம் செய்வதில் வால்மார்ட்டுக்கு பிரச்சினைகள் இருந்தன. இப்போதைக்கு 28 மொத்த விற்பனை நிலையங்களை இந்தியாவில் கொண்டுள்ள வால்மார்ட் சிறு வியாபாரிகளுக்கு பொருட்களை விற்பனை செய்து வந்தது, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யவில்லை.

தற்போதைய பணி நீக்கம் பெரும்பாலும் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் டிவிஷன் நிர்வாகிகளையே பாதித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த விற்பனை மாதிரி எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வளர்ச்சியடையவில்லை என்பதனால் இந்த அதிரடி முடிவு என்று தெரிகிறது.

இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதால் பெயர் கூற விரும்பாத ஒரு தரப்பு கூறும்போது, “இ-காமர்ஸ் நோக்கி நிறுவனத்தின் கவனம் திரும்பியுள்ளதால் மொத்த விற்பனை நிலையங்கள் மீதான விரிவாக்க கவனம் இப்போதைக்கு இல்லை” என்று கூறியது.

இந்தப் பணிநீக்கம் தொடர்பாக வால்மார்ட் நிறுவனத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொடர்பு கொண்ட போது பதில் அளிக்க முன்வரவில்லை.

இந்தியாவில் இ-காமர்ஸ் விற்பனைக்கு இருக்கும் கிராக்கியினால் கடந்த ஆண்டு 16 பில்லியன் டாலர்கள் கொடுத்து பிளிப்கார்ட்டில் பெரும்பகுதி பங்குகளை விலைக்கு வாங்கியது வால்மார்ட்.

இன்னும் கூட பணிநீக்கங்கள் இருக்கும் என்றே வால்மார்ட் வட்டாரம் தெரிவிக்கிறது. வால்மார்ட் நிறுவனம் தன் தலைமை அலுவலகத்தில் இந்தியாவில் 600 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியா முழுதும் சுமார் 5,300 பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )