இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்: அமேசான் உறுதி

இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்: அமேசான் உறுதி

இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கு வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உறுதியளித்துள்ளார்.

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுக்காக 100 கோடி டாலர் தொகை முதலீடு செய்யப்படும் என அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதுபற்றி கூறுகையில் ‘‘இந்தியாவில் 100 கோடி டாலரை முதலீடு செய்வதாக அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் கூறியுள்ளார். ஆண்டுக்கு 100 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்து வரும் எவ்வாறு முதலீடு செய்ய முடியும்.

அதுபோலவே இந்தியாவில் முதலீடு செய்வதால் மின்னணு வர்த்தகத்துக்கு ஆதரவான செயல்பாடுகளை எடுக்க முடியாது. மல்டி பிராண்ட் சில்லரை விற்பனையில் 49 சதவீதத்துக்கு மேல் நேரடி அந்நிய முதலீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை. எந்த நிறுவனமாக இருந்தாலும் அது இந்தியாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் முதலீடு செய்யவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முனைந்து வரும் அமேசான் நிறுவனத்தின் முயற்சியை தடுக்கும் முயற்சியில் மத்திய அமைச்சர் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தனது பேட்டி குறித்து பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கூறி கருத்து மற்ற நிறுவனத்திற்கு எதிராக கூறியதாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில் ஜெப் பெசோஸ் எழுதிய கடிதம் அமேசான் இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறுகையில் ‘‘நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போது புத்துணர்ச்சியையும் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் திரும்புகிறனே். தற்போதும் அதனை நான் பெற்றுள்ளேன். என்னை ஈர்த்துள்ள இந்திய மக்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன். வரும் 2025-ம் ஆணடுக்குள் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அமேசான் இலக்காக கொண்டு செயல்படும்’’ எனக் கூறியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )