இணையதளத்தில் பொருள் வாங்கியதில் மத்திய அரசுக்கு  ரூ.7,500 கோடி மிச்சம்

இணையதளத்தில் பொருள் வாங்கியதில் மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி மிச்சம்

மத்திய அரசு இணையதளம் மூலம் பொருட்களை வாங்கியதன் மூலம் 100 கோடி டாலர் அளவுக்கு (ரூ.7,500 கோடி) மிச்சமாகி உள்ளது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலம் 40,000 கோடி டாலர் அளவுக்கு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 100 கோடி டாலர் மிச்சம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசின் இ-சந்தை இணைய சேவை பெரும்பாலும் அமேசான்.காம் மூலம் பொருட்களை வாங்கியுள்ளது. அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர், கார், நாற்காலி போன்ற பொருட்களை குறைந்த விலையில் இணையதளம் மூலம் வாங்கியதால் அரசுக்கு பெருமளவு தொகை மிச்சமாகி உள்ளது. இந்த இணையதளத்தில் ஹிந்துஸ்தான் யுனி லீவர், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ரூபாயாக சேமித்ததில் அதிக தொகை சேமிக்கப்பட்டுள்ளது என்று அரசு இணையதள சந்தை தலைமை செயல் அதிகாரி
தல்லீன் குமார் தெரிவித்துள்ளார். இவ்விதம் சேமிக்கப்பட்ட தொகை பிற முக்கியமான பணிகளில் பயன்படுத்த அரசு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியா தனது ஜிடிபி-யில் 18 சதவீத அளவுக்கு பொருட்களை வாங்க செலவிடுகிறது. இதில் கால் பங்கு இணையதளம் மூலம்
வாங்கப்படுகிறது. பிற கொள்முதல் மிகவும் முக்கியமான ராணுவ தளவாடங்கள் மற்றும் விமானங்கள் வாங்குவதற்கானதாகும். தற்போது 350 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் இணையதளம் மூலம் வாங்கப்படுகிறது. அடுத்த மூன்று அல்லது ஐந்தாண்டு
களில் இந்த அளவானது 10,000 கோடி டாலர் அளவை எட்டும் என்று குமார் தெரிவித்தார்.

வழக்கமான கொள்முதல் மாறி இணையதளம் மூலம் கொள்முதல் செய்வதால் 10,000 கோடி டாலர் வரை சுகாதாரத் துறைக்கு
செலவிடும் தொகை மீதமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும் சூழலில் இத்தகைய சேமிப்பு பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மிகப் பெரிய சேமிப்பாகும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )