ஆவணங்களின் ரகசியம் வெளியான விவகாரம்: தேசிய பங்குச் சந்தையில் செபி விசாரணை

ஆவணங்களின் ரகசியம் வெளியான விவகாரம்: தேசிய பங்குச் சந்தையில் செபி விசாரணை

தேசிய பங்குச் சந்தையில் பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் செபி விசாரணையை மேற்கொண் டுள்ளது. இம்முறை ஆவணங் களின் ரகசியம் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப் படுகிறது.

தேசிய பங்குச் சந்தையின் ரகசிய ஆவணங்களின் விவரம் புரோக்கர்கள் சிலருக்கு கிடைத்தது குறித்து செபி விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் கோரும் நோட்டீஸை கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி செபிஅனுப்பியிருந்தது. இதுதொடர் பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் ஏற்கெனவே தேசிய பங்குச் சந்தையானது செபி-யின் உத்தரவு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் மேல் முறையீட்டு வாரியத்திடம் (எஸ்ஏடி) விசாரணையில் உள் ளது.

தற்போது நடைபெறும் விசாரணையானது 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையான காலத்தில், இதன் தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்த காலத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பம் சார்ந்து என்எஸ்இ எடுத்த சில ரகசிய முடிவு கள் வெளியானது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெறு கிறது. இந்த முடிவுகள் அனைத் தும் என்எஸ்இ இயக்குநர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். இது தவிர, என்எஸ்இ நடத்திய ஆய்வுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்கு பரிவர்த்தனை செட்டில்மென்ட் தொடர்பாக செபிக்கு அளிக்கவேண்டிய கட்டணம் குறித்த விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து என்எஸ்இ மேல் முறை யீடு செய்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட முடிவு குறித்து விசா ரணை நடத்தப்படுகிறது. இதில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரலில் என்எஸ்இ அனுப்பிய விண்ணப்பத்தை செபி நிராகரித்து என்எஸ்இ-க்கு அபராதம் விதித்தது. இது தவிர, என்எஸ்இ-யில் பணி புரிந்த உயர் அதிகாரிகளுக்கும் முன்னாள் அதிகாரிகளுக்கும் அபராதம் விதித்தது செபி.

தற்போது இரண்டு கட்டங்களாக விசாரணை நடைபெறுகிறது. முதற்கட்ட விசாரணை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் கிளியரிங் கார்ப்பரேஷன் (எஸ்இசிசி) விதிமுறைகள் மற்றும் பங்குச் சந்தை அமைப்புக்கான நடத்தை சார் விதிமுறைகள் தொடர்பானதாகும். இதில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் விதிகளை மீறி யிருந்தால் அந்த நிறுவனமானது அத்தவறுக்கு காரணமான ஊழியர் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் என்எஸ்இ-யின் உத்திசார் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப் பட்டது குறித்தும் செபி கேள்வி எழுப்பியுள்ளது.

செபி விடுத்த விளக்கம் கோரும் நோட்டீஸ் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் பொதுப் பங்கு வெளியிடும் (ஐபிஓ) முடிவை என்எஸ்இ தள்ளி வைக்க வேண் டியதாயிற்று. மேலும் பொதுப் பங்கு வெளியிட ஆறு மாதங் களுக்கு தடை விதித்தது செபி. இந்த காலக்கெடு அக்டோபருடன் முடிவடைந்து விட்டது.

2017-ம் ஆண்டு என்எஸ்இஐபிஓ வெளியிட விண்ணப்பித்தது. அப்போது சில காரணங்கள் காட்டி விண்ணப்பத்தை செபி நிராகரித் தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )