ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நிஞ்சாகார்ட்டை வளைக்கிறது வால்மார்ட்

ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நிஞ்சாகார்ட்டை வளைக்கிறது வால்மார்ட்

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான நிஞ்சாகார்ட் நிறுவனத்திலும் வால்மார்ட் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஒன்றான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீதப் பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் வாங்கியது.

பிளிப்கார்ட்டின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 77 சதவீதப் பங்குகளை வாங்க வால்மார்ட் வாங்கியுள்ளது. எனவே சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்பிறகு பெருமளவில் வர்த்தகத்தை அதிகரிக்க வால்மார்ட் -பிளிப்கார்ட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய ஆன்லைன் சந்தையில் ஒரளவு வர்த்தகம் செய்து வரும் இந்திய நிறுவனங்களை வாங்கும் முயற்சியிலும் வால்மார்ட் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான நிஞ்சாகார்ட் நிறுவனத்திலும் வால்மார்ட் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் எத்தனை சதவீத பங்குகள் வாங்கப்பட்டுள்ளன, எவ்வளவு முதலீடு போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நிஞ்சாகார்ட் நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் பல இடங்களில் நேரடி விற்பனை நிறுவனங்கள் உள்ளன. பண்ணை பசுமை விற்பனை என்ற வர்த்தக இலக்கை கொண்டு நிஞ்சாகார்ட் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )