அலாகாபாத் வங்கி நஷ்டம் ரூ.2,103 கோடி

அலாகாபாத் வங்கி நஷ்டம் ரூ.2,103 கோடி

புதுடெல்லி

அலாகாபாத் வங்கி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.2,103 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால் வங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் நஷ்டம் ரூ.1,816 கோடியாகும்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வங்கி ரூ.128 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,725 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ.4,492 கோடியாக இருந்தது.

வங்கியின் வாராக் கடன் 19.05 சதவீதமாக உயர்ந்து ரூ.31,467 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வாராக் கடன் ரூ.27,236 கோடியாக இருந்தது.

வங்கியின் நிகர வாராக் கடன் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.8,502 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ.11,082 கோடியாக இருந்தது. கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,721 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஒதுக்கிய தொகை ரூ.1,991 கோடியாகும்.

பங்கு மதிப்பு சரிவுஆர்பிஐ வகுத்தளித்த பிசிஏ வழிகாட்டுதலில் இந்த ஆண்டு கடனுக்கான கூடுதலாக ரூ.1,982 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. பங்குச் சந்தையில் வங்கி பங்குகள் 3.5 சதவீத அளவுக்கு சரிந்தன. ஒரு பங்கின் விலை ரூ.26.05 என்ற விலையில் வர்த்தகமானது. நேற்றைய வர்த்தகத்தில் வங்கிப் பங்கு 11.29 சதவீதம் வரை சரிந்தது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )