cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் :சஹா - Dhinasakthi

ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் :சஹா

விக்கெட் கீப்பிங்கில் ரிஷாப் பண்ட் முன்னேற்றம் காண வேண்டும் என சஹா இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நேற்று அளித்த பேட்டியில், ‘இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் நீங்கள் கேளுங்கள். எங்களுக்குள் நல்ல நட்புறவு இருப்பது தெரியும். ஆடும் லெவனில் யார் இடம் பெற்றாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம். தனிப்பட்ட முறையில் அவருடன் எந்த முரண்பாடோ, மோதல் போக்கோ கிடையாது. எங்களில் யார் நம்பர் ஒன், நம்பர் 2 விக்கெட் கீப்பர் என்று பார்ப்பதில்லை. யார் சிறப்பாக செயல்படுவார் என்பதை கணித்து அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்குகிறது. எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன். அணியில் தேர்வு செய்வது எனது கையில் இல்லை. அது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது.

எப்போதும் படிப்படியாகத் தான் முன்னேற முடியும். ரிஷாப் பண்ட் தனது சிறந்த பங்களிப்பை அளிக்கிறார். ஆனால் விக்கெட் கீப்பிங்கில் நிச்சயம் அவர் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அவர் நீண்ட காலம் விளையாடும் போது, அது இந்திய அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

அடிலெய்டு டெஸ்டில் என்னால் ரன் எடுக்க இயலவில்லை. அதனால் தான் ரிஷாப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அவ்வளவு தான். மற்றபடி நான் எனது ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். எந்த ஒரு தருணத்திலும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது’ என்றார்.