மெங் வென்சோ நாடு திரும்பியது பற்றிய நேரலையின் வரவேற்பு

சீன அரசின் முயற்சியுடன், மென் வென்சோ அம்மையார் கனடாவில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம், 25ஆம் நாளிரவு தாய்நாட்டுக்குத் திரும்பினார்.

இது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹைசியோங் 26ஆம் நாள் கூறுகையில், இது பற்றிய நேரலை, சீனாவின் இணையப் பயன்பாட்டவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சில புதிய ஊடக மேடைகளில் மட்டும் இதற்கு விருப்பம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை 40 கோடியை எட்டியுள்ளது. இது, அமெரிக்கா மற்றும் கனடாவின் மக்கள் தொகையின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்று தெரிவித்தார்.