முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் வெளி வர்த்தகம் உயர்வு

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை
நடத்தியது. இதில், சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் செய்தித்
தொடர்பாளர் லி குய்வென் 2021ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலைமையை அறிமுகப்படுத்தினார்.
புள்ளிவிவரங்களின் படி, இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீனாவின்
மொத்த வெளிநாட்டு வர்த்தக மதிப்பு 28 லட்சம் 33 ஆயிரம் கோடி யுவானாக உள்ளது.
இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 22.7 விழுக்காடு அதிகமாகும். இதில் ஏற்றுமதி
மதிப்பு 22.7 விழுக்காடு அதிகரிப்புடன் 15 லட்சம் 55 ஆயிரம் கோடி யுவானை
எட்டியது. இறக்குமதி மதிப்பு 22.6 விழுக்காடு அதிகரிப்புடன் 12 லட்சம் 78 ஆயிரம்
கோடி யுவானை எட்டியது. வெளிநாட்டு வர்த்தக மதிப்பு தொடர்ந்து 5
காலாண்டுகளாக சாதகமான வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.