மூல எரிச்சல், மூலச் சூடு மற்றும் இரத்த மூலத்துக்கு உகந்த கசாயம்

மூல எரிச்சல், மூலச் சூடு மற்றும் இரத்த மூலத்துக்கு உகந்த கசாயம்

மூல எரிச்சல், மூலச் சூடு மற்றும் இரத்த மூல பாதிப்பு உள்ளவர்கள் இந்த கசாயத்தை பயன்படுத்தி வர விரைவில் குணமாகும்.

அகத்திக் கீரை கடுக்காய் கசாயம்

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை – 4 கட்டு

கடுக்காய் தோல். – 5

செய்முறை

முதலில் அகத்திக் கீரையை நன்கு சுத்தப் படுத்தி ஆய்ந்து அதனை அரைத்து சாறாக்கிக் கொள்ளவும். கடுக்காயை கொட்டையை நீக்கி தோல் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அகத்திக் கீரைச் சாற்றை ஊற்றி அதில் கடுக்காய் தோலையும் தட்டிப் போட்டு இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து பாதியாகச் சுண்ட வைத்து இறக்கி வைக்கவும். சுண்ட வைத்த கசாயத்தை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி பொறுக்கும் சூட்டில் உட்கார்ந்து ஆசனக் குளியல் சுமார் அரை மணி நேரம் செய்யவும்.

அப்பொழுது தண்ணீருக்குள் ஆசனவாயை நன்கு சுருங்கி விரியும் படி பயிற்சி செய்து வரவும்.

பயன்கள்

இந்தக் கசாயத்தை கொண்டு ஆசனவாய் குளியல் செய்து வந்தால் நாட்பட்ட இரத்த மூலம், மூலக் கடுப்பு மற்றும் மூல எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக செயல்படும். இந்தக் கசாயம் குடிப்பதற்கு அல்ல. வெளிப்புறமாக பயன்படுத்துவதற்கு.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )