மூலத்தில் உண்டாகும் பௌத்திர கட்டிகளை குணமாக்க உதவும் கசாயம்

மூலத்தில் உண்டாகும் பௌத்திர கட்டிகளை குணமாக்க உதவும் கசாயம்

தண்டுக் கீரை வெந்தய கசாயம்

தேவையான பொருட்கள்

தண்டுக் கீரை – ஒரு கைப்பிடி

வெந்தயம் – 10 கிராம்

சீரகம் – 5 கிராம்

செய்முறை

முதலில் தண்டுக் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள தண்டுக் கீரையைச் சேர்த்து அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து பாதி அளவாக சுண்ட வைத்து அந்தச் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்கள்

மூல நோய் மற்றும் பௌத்திர கட்டிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்தக் கசாயத்தை தயார் செய்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூல நோய்களும், மூலத்தில் உண்டாகும் பௌத்திர கட்டிகளையும் குணமாக்க உதவும் அருமருந்து.

இரவு படுக்கப்போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )