பெரு வயிறு கரையவும் , மலச்சிக்கலை தீர்க்கவும் உதவும் கசாயம்

பெரு வயிறு கரையவும் , மலச்சிக்கலை தீர்க்கவும் உதவும் கசாயம்

கறிவேப்பிலை நிலாவரைக் கசாயம் செய்ய தேவையான பொருட்கள்

உலர்ந்த கறிவேப்பிலை – 200 கிராம்

உலர்ந்த நிலாவரை – 200 கிராம்

செய்முறை

முதலில் கறிவேப்பிலை மற்றும் நிலாவரையை நன்கு உலர வைத்து தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். பின்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 300 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நீர் நன்கு கொதித்து பாதியளவாக சுண்டவைத்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த கசாயத்தை பெரு வயிறு பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் தினமும் இரவு உணவிற்குப் பின் குடித்து வந்தால் பெரு வயிறு கரையும்.

மேலும் இதே கசாயத்தை தீராத மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்களும் இரவு வேளை உணவிற்குப் பின் குடித்து வருவதன் மூலம் தீராத மலச்சிக்கலும் தீரும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )