பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ஆரோக்கியமானக் கஞ்சி

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ஆரோக்கியமானக் கஞ்சி

அரசாணிக்காய் சிறுதானியக் கஞ்சி

தேவையான பொருட்கள்

அரசாணிக்காய் – 100 கிராம்
குதிரை வாலி – 50 கிராம்
வரகு – 50 கிராம்
சாமை – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
தேங்காய்ப் பால் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு பல் – 4
சீரகம் – அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அரசாணிக்காயை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
சிறுதானியங்கள் அனைத்தையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
பிறகு தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து அதனோடு பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். கொஞ்சம் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸை சேர்த்து கஞ்சி பதம் வரும் வரை வேகவிடவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்க விடவும்.
பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பின்பு பரிமாறவும்.
பயன்கள்

சத்துக்கள் நிறைந்த இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம்.
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )