பழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா?

பழங்களின் ஏஞ்சல் எது தெரியுமா?

பழங்களின் “ஏஞ்சல்’ என்று அழைக்கப்படும் பப்பாளி மிக மலிவான விலையில் கிடைக்கக் கூடியதும், அதிக அளவு சத்துகள் கொண்டதுமான பழம். இப்பழத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்:

பப்பாளிப் பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
இதன் காயை கூட்டு போன்று செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
தேனில் தோய்த்து பழத்தை உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

இதன் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மீது போட்டு வர கட்டி உடையும்.
இலைகளை அரைத்து சாறு எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )