
நோய்களை விரட்டி உடலை திடகாத்திரமாக வைக்க உதவும் கஞ்சி
வெண்பூசணி வரகுக் கஞ்சி
தேவையான பொருட்கள்
வரகு – 100 கிராம்
வெண் பூசணிக்காய் – 100 கிராம்
பூண்டு – 10 பல்
சுக்கு – ஒரு துண்டு
சீரகம் – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
பசும் பால் – 100 மி.லி
செய்முறை
வெண்பூசணிக் காயை தோல் விதையோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
வரகு அரிசியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 200 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
வரகு அரிசி பாதி வெந்த நிலையில் இருக்கும் போது அதில் பூண்டு, ஒரு துண்டு சுக்கு, சீரகம், வெந்தயம், பசும் பால் மற்றும் அரைத்து ஜூஸாக்கி வைத்துள்ள வெண்பூசணிக் காயைச் சேர்த்து வேக விடவும்.
நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
இதனோடு கறிவேப்பிலை புளித் துவையல் செய்து சாப்பிட்டால் சுவை கூடும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வரும் நோய்களை விரட்டி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் அற்புதக் கஞ்சி.