நாள்பட்ட நீர் எரிச்சல் , நீர் கடுப்பால் அவதிப்படுகிறீர்களா?

நாள்பட்ட நீர் எரிச்சல் , நீர் கடுப்பால் அவதிப்படுகிறீர்களா?

நாள்பட்ட நீர் எரிச்சல், நீர்கடுப்பால் அவதிப்படுகின்றவர்கள் பசலைக் கீரை சீரகம் கசாயத்தைச் செய்து சாப்பிட்டு வர விரைவில் அந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை. – 2 கட்டு

பார்லி. – 3 ஸ்பூன்

சீரகம். – 3 ஸ்பூன்

செய்முறை

முதலில் பசலைக் கீரையை நன்கு கழுவி ஆய்ந்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த சாற்றில் பார்லி மற்றும் சீரகத்தை 12 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறினப் பிறகு அதனை காயவைத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் மூன்று ஸ்பூன் அளவு போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்டவைத்து இறக்கி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

பயன்கள்

நீர்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் தொடர்ந்து உள்ளவர்களுக்கு மிகச் சிறத்த தீர்வை தரக்கூடிய கசாயம் பசலைக் கீரை சீரகம் கசாயம்.

இதனை காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )