நரம்புச் சார்ந்த குறைபாடுகளிலிருந்து விடுபட உதவும் கசாயம்

நரம்புச் சார்ந்த குறைபாடுகளிலிருந்து விடுபட உதவும் கசாயம்

நரம்புச் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் இந்த தண்டுக் கீரை உளுந்து கசாயத்தைப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

தேவையான பொருட்கள்

தண்டுக் கீரை – ஒரு கட்டு

கருப்பு உளுந்து – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை

முதலில் தண்டுக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். உளுந்தை லேசாக வறுத்து உடைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் தண்டுக் கீரை , உளுந்து மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்டுக் கீரையுடன் உளுந்து நன்கு கொதித்தப் பிறகு அதனை பாதியளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி வைத்து குடிக்கவும்.

பயன்கள்

நரம்புச் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்டுக் கீரை உளுந்து கசாயத்தை குடித்து வருவதன் மூலம் நரம்புக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )