தொண்டைப் புண், வயிற்றுப் புண் ஆகியவற்றை குணப்படுத்த உதவும் கசாயம்

தொண்டைப் புண், வயிற்றுப் புண் ஆகியவற்றை குணப்படுத்த உதவும் கசாயம்

மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளிக் கீரை மாசிக்காய் கசாயம்

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை ஒரு கைப்பிடி, மாசிக்காய் ஒன்று, மஞ்சள் தூள் சிறிதளவு.

செய்முறை

முதலில் மணத்தக்காளிக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை மற்றும் மாசிக்காயை தட்டிப் போட்டு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்

இந்தக் கசாயம் தொண்டைப் புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

இந்தக் கசாயத்தை தினமும் காலை அல்லது மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )