தீராத வயிற்று வலியை போக்க உதவும் அருமருந்து

தீராத வயிற்று வலியை போக்க உதவும் அருமருந்து

பூசணிக்காய் விதை குடைவாழை அரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

வெண் பூசணி விதை – 100 கிராம்
அரசாணிக்காய் விதை – 100 கிராம்
குடைவாழை அரிசி – 100 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
தயிர் – சிறிதளவு

செய்முறை

முதலில் வெண் பூசணி விதை, அரசாணிக்காய் விதை மற்றும் வெந்தயம் மூன்றையும் வாணலியில் லேசாக வறுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
குடைவாழை அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பையும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் ஊறவைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
அரிசி நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் பத்து கிராம் அளவு எடுத்து கஞ்சியுடன் சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து அதில் தயிர் சேர்த்து பருகவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சி வயிற்றுப் புண், செரிமானக் கோளாறு மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு உன்னதமான உணவுக் கஞ்சி.

இதனை தினமும் ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் ஜீரணசக்தியை அதிகரித்து குடல் சார்ந்த நோய்களை நீக்கும் அதிஅற்புதமான உணவுக் கஞ்சி.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )