சளி இருமல் தொண்டை வலியா?

சளி இருமல் தொண்டை வலியா?

முருங்கைப் பட்டை திப்பிலி பால் கஞ்சி

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி நொய் – 100 கிராம்
முருங்கைப் பட்டை – 10 கிராம்
திப்பிலி – 10
பால் – 500 மி.லி
பூண்டு – 5 பல்
மிளகு – 10

செய்முறை

முதலில் புழுங்கலரிசி நொய்யை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
முருங்கைப் பட்டை, பூண்டு, மிளகு மற்றும் திப்பிலி நான்கையும் சேர்த்து ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும்.
நொய்யரிசியை நன்கு குழையும்படி வேக வைத்தப் பின்பு அதில் காய்ச்சிய பால் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்

இந்தக் கஞ்சியை கப சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப் பட்டவர்கள் ஒரு வேளை உணவாகவோ அல்லது மருந்தாகவோ எடுத்துக் கொள்வதன் மூலம் கபத்தன்மையிலிருந்து விடுபட முடியும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )