கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது!

கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது!

செம்பருத்திப் பூ பருப்புக் கஞ்சி

தேவையான பொருட்கள்

நொய்யரிசி – 100 கிராம்
சிறுபருப்பு – 100 கிராம்
மிளகு – 10
சீரகம் – கால் ஸ்பூன்
செம்பருத்திப் பூ – 10

செய்முறை : தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் செம்பருத்திப் பூவைத் தவிர (நொய்யரிசி, சிறுபருப்பு, மிளகு, சீரகம்) ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்த பின், அதில் செம்பருத்திப் பூவின் இதழ்களை நீக்கி நன்றாக அலசி கஞ்சியுடன் சேர்த்து நன்றாக கிளறி குழைய வேக வைத்து இறக்கி வைக்கவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை தினமும் ஒரு வேளை உணவாக குடித்து வந்தால் கடுமையான இதய நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் சூடு குறைபாட்டை நீக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )