எப்படிப்பட்ட இருமலையும் குணப்படுத்தும் அருமருந்து

எப்படிப்பட்ட இருமலையும் குணப்படுத்தும் அருமருந்து

நாட்பட்ட இருமலால் அவதிப்படுபவர்கள் வெந்தயக் கீரை உலர் திராட்சை கசாயத்தை குடித்துவர விரைவில் குணமாகும்.

தேவையான பொருட்கள்

வெந்தயக் கீரை – ஒரு கையளவு

உலர் திராட்சை – 10

சீரகம் – அரை ஸ்பூன்

செய்முறை

வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக் கீரை, உலர் திராட்சை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நீரில் வெந்தயக் கீரை நன்கு கொதித்து அந்த நீரை 150 மி.லி அளவாக சுண்டவைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

பயன்கள்

நாட்பட்ட இருமல், தொடர் இருமல், வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள் இந்தக் கசாயத்தை தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )