உடலுக்கு வலுவைக் கொடுக்கும் அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி

உடலுக்கு வலுவைக் கொடுக்கும் அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 100 கிராம்
அரசாணிக்காய். – 100 கிராம்
தேங்காய்ப் பால். – 300 மி.லி
உளுந்து. – 50 கிராம்
பாசிப் பருப்பு. – 20 கிராம்
பனைவெல்லம். – 100 கிராம்
சுக்கு, ஏலக்காய்ப் பொடி – ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல – ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் சாமை அரிசி, உளுந்து, பாசிப் பருப்பு மூன்றையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்து ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அரசாணிக்காயை தோலோடு துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
பனை வெல்லத்தை கரைத்து கரைசலாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்து பொடித்துள்ள சாமை அரிசியைப் போட்டு அதில் 200 மி.லி தேங்காய்ப் பாலை ஊற்றி மேலும் அதில் 150 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு குழையும் படி வேக வைக்கவும்.
சாமை அரிசி நன்கு வெந்தவுடன் அதனை நன்கு மசித்து அதில் அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸ் , மீதியுள்ள தேங்காய்ப் பால் மற்றும் பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
இந்தக் கஞ்சியை சூடாக இருக்கும்பொழுது மிக அருமையாக இருக்கும்.

பயன்கள்

இந்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுக்கும் ஆரோக்கியக் கஞ்சி.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )