உடலுக்கு சக்தியையும் வலிமையையும் கொடுக்க உதவும் ஆரோக்கியக் கஞ்சி

உடலுக்கு சக்தியையும் வலிமையையும் கொடுக்க உதவும் ஆரோக்கியக் கஞ்சி

பச்சரிசி முட்டைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

பச்சரிசி நொய் – 150 கிராம்
முட்டை – 2 எண்ணிக்கை
தண்ணீர் – ஒரு லிட்டர்
உப்பு அல்லது சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசி நொய்யை களைந்து கொள்ளவும்.
முட்டையை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பச்சரி நொய்யை போட்டு நன்கு கொதிக்க வைத்து கஞ்சி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
பின் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் வேகவைத்த முட்டையைத் தூளாக்கிப் போட்டுக் கலந்து இறக்கி வைத்துக் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு கஞ்சியுடன் பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து வரலாம்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலுக்கு சக்தியையும் வலிமையையும் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )