ஆஸ்துமா நோயாளிகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் கஞ்சி

ஆஸ்துமா நோயாளிகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் கஞ்சி

கறிவேப்பிலை சாமைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சாமை அரிசி- 100 கிராம்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

சுக்கு – ஒரு துண்டு

திப்பிலி – 2

கருப்பு எள் – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை

முதலில் சாமை அரிசியை உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை, சுக்கு, மிளகு, திப்பிலி, உளுந்து, கருப்பு எள் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சாமை குருணையை போட்டு வேக வைக்கவும்.
நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
பயன்கள்

இந்தக் கஞ்சியில் மருத்துவக் குணம் நிறைந்திருக்கும்.
ஆகையால் இந்தக் கஞ்சியை ஆஸ்துமா நோயாளிகள் தினமும் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு உண்டாகும் வயிறு உப்புசம் மற்றும் ஜீரணக் கோளாறு , மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தீர்க்கக் கூடிய அற்புதமானக் கஞ்சி

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )