அதிகப்படியான கபத்தைக் கரைக்க உதவும் அற்புத மருந்து!

அதிகப்படியான கபத்தைக் கரைக்க உதவும் அற்புத மருந்து!

அதிகப்படியான கரையாத கபத்தைக் கரைக்கப் புதினா இலை உப்பு கசாயத்தைப் பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்

புதினா இலை – ஒரு கையளவு

உப்பு – சிறிதளவு

செய்முறை

முதலில் புதினா இலையை எடுத்து சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் புதினா இலையைச் சேர்த்து அதனுடன் கொஞ்சம் கூடுதலாக உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து 100 மி.லி அளவாகச் சுண்டச் செய்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பயன்கள்

நெஞ்சில் அதிகப்படியான கபம் இருந்து வெளியேற்ற முடியாமல் அவதிப்படுபவர்கள் இந்த கசாயத்தை தயார் செய்து காலை வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மார்புச் சளி மற்றும் கரையாத கபத்தையும் வெளியேற்றி சுவாசத்தை சீர்படுத்தும் அற்புதமான மருத்துவ கசாயம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )