மராட்டியத்தில் தற்போதைக்கு முழு ஊரடங்கு இல்லை: அரசு முடிவு

மராட்டியத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்றைய ஒருநாள் பாதிப்பு மட்டும் 10 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. இந்த நிலையில், மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப் கூறுகையில்,“ கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம், மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் குறித்து அரசு முடிவு எடுக்கும். தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் தேவை 700 மெட்ரிக் டன்களைத் தாண்டினால், மாநிலம் தானாகவே ஊரடங்கு சூழலுக்கு இட்டுச் செல்லும்’’ என்று கூறினார்.