புதுமை சார்ந்த அணுகுமுறையின் மூலம் நிலையான வளர்ச்சியின் பாதையில் சீனா

default

புதுமை சார்ந்த அணுகுமுறையின் மூலம் நிலையான வளர்ச்சியின் பாதையில் சீனா
நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலுடன் சீனா தனது நடுத்தர மற்றும்
நீண்டகால வளர்ச்சி உத்திகளை சீன அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது. இது
நாட்டில் பொருளாதார அரசியல், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார
முன்னேற்றத்தை எளிதாக்குகிறது. ஒரு புதுமை சார்ந்த அணுகுமுறையின் மூலம், சீனா
நிலையான வளர்ச்சியை அடைய சிறந்த சுற்றுச்சூழல் நாகரிகத்தை உருவாக்குதல்,
வறுமையை ஒழித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிலையான
தீர்வுகளை வழங்குதல் என மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
சீனா தனது கிராமப்புற ஏழை மக்கள் அனைவரையும் முழுமையான வறுமையிலிருந்து
விடுவிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 128,000 கிராமங்கள், 832 மாவட்டங்கள்
வறுமையால் பாதிக்கப்பட்டவை மற்றும் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் தீவிர
வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சீனா எப்படி இந்த குறிப்பிடத்தக்க
சாதனையை அடைந்தது? நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலை
செயல்படுத்துவதற்கான அறிக்கையின் படி 1980 களில் இருந்து, சீனாவின்
கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டு
ஒருங்கிணைக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின்
கிராமப்புறங்களில் வறுமையில் இருந்த மொத்த மக்கள் தொகையில் 55.75
மில்லியனில் இருந்து 16.6 மில்லியனாக குறைக்கப்பட்டது.
இந்த கொள்கை நடவடிக்கைகள் வறுமையை ஒழிப்பதில் பயனுள்ளதாக இருந்தன,
ஏனெனில் கிராமப்புறங்களில் பல மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
துல்லியமான அடையாளம் காணும் நடைமுறையின் மூலம், ஏழை குடும்பங்கள்
அடையாளம் காணப்பட்டு, வீட்டு ஆய்வுகள், சமூக கலந்துரையாடல்கள், பொதுத்
தகவல்களுக்கான அழைப்புகள் மற்றும் பயனுள்ள தரவு சேகரிப்பு நடைமுறைகளால்
இது சாத்தியமானது. இந்த நடைமுறையின் மூலம், ஏழைகள் அடையாளம்
காணப்பட்டனர் பின்னர் ஏழை வீடுகளின் துல்லியமான தேவைகளுக்கு ஏற்ப
குறிப்பிட்ட நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
21 ஆம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வளர்ச்சிக்கான ஒரு ஒத்திசைவான
கருத்தியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு புதுமையான அணுகுமுறையை
சீனா பின்பற்றியது மேலும் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக; சுற்றுச்சூழல்
நாகரிக கொள்கையின் நோக்கத்தை விரிவுபடுத்தியது. கலாச்சாரம் மற்றும் அரசியல்
போன்ற கூறுகளும் இதில் அடங்கும்.
சுற்றுச்சூழல் நாகரிகத்தை அடைய சீனா புதுமையை நம்பியுள்ளது. 2016 ல், சீன
மத்திய அரசு 2030 நிலையான வளர்ச்சிக்கு நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதற்காக
சீனாவின் புதுமையான செயல் விளக்க மண்டலங்களை உருவாக்கி, சுமார் 10 தேசிய
கண்டுபிடிப்பு செயல்விளக்க மண்டலங்களை முன்மொழிந்தது.
இந்த நடைமுறைகளால் ஷென்சென் உட்பட, சீனாவின் பல பகுதிகளில் பொருளாதார
வலிமை மற்றும் வளர்ச்சியின் தரம் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதற்காக நகரத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது, நீர் மாசுபாட்டை குறைக்க வளங்களின் பயன்பாட்டை
திறம்பட கையாள்வதோடு புதுமை சார்ந்த அணுகுமுறையின் மூலம் நிலையான
வளர்ச்சிக்கான முயற்சிகளை ஷென்சென் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது
பசுங்கூட வாயுக்கள வெளியேற்றத்தைக் குறைப்பதில் சீனா உறுதியாக உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.