புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பெரிதும் வளர்க்கும் சீனா: ஷிச்சின்பிங்

உயிரினங்களின் பன்முகத்தன்மை பற்றிய ஐ.நா. ஒப்பந்தத்தில் இணைந்த தரப்புகளின்
மாநாட்டின் 15ஆவது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள்
மாலை காணொலி மூலம் பங்கேற்று தலைமையுரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், கார்பன் வெளியேற்றத்தின் உச்சம் மற்றும் நடுநிலை
என்ற இலக்குகளை நனவாக்குவதை முன்னெடுக்கும் விதமாக, முக்கிய துறைகள்
மற்றும் தொழில்களுக்கு உகந்த ஆதரவு நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து
வெளியிடும். அதன் மூலம், கார்பன் உச்சம் மற்றும் நடுநிலை ஆகியவற்றுக்கான
கொள்கைக் கட்டுக்கோப்பு உருவாக்கப்படும். தொழிற்துறை மற்றும் எரியாற்றல்களின்
அமைப்பைச் சரிச்செய்வதை முன்னேற்றும் போக்கில், சீனா புதுப்பிக்கத்தக்க
ஆற்றலை பெரிதும் வளர்க்கும். இதற்காக, பாலைவனப் பகுதிகளில் காற்று மற்றும்
சூரிய ஒளி மூலம் பெரிய மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று
குறிப்பிட்டார்.