புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 15-ம் தேதி நடைபெறும்…!

ஜனவரி 15-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.
மதுரை,

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு என்னும் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டு நடத்தப்படும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று ஆகும். இவ்வூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பல ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்களும், வெளி நாட்டுப் பயணிகளும் வந்து கூடுவது ஆண்டுதோறும் வழக்கம்.

அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி சில கட்டுப்பாடுகளுடன் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஜனவரி 15-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுவிக்க உள்ளதாகவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.