பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சையை அங்கீகரித்த BRI நாடுகள்

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கன்சு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சையானது வளர்ந்து வரும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் உள்ள நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் கன்சு மாகாணத்தில் இருந்து 4,000 டோஸ்கள் பெலாரஸ் நாட்டிற்கு நவம்பர் 9 ஆம் நாள் வழங்கப்பட்டது. கன்சு மாகாணம் கடந்த ஆண்டு பெலாரஸுக்கு 15,500 டோஸ்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்சு மாகாணத்தின் சுகாதார ஆணையத்தின் அதிகாரியான ஜின் கியாங் கூறுகையில், பெலாரஸ் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், புதிய மருந்துகள் அனுப்பப்பட்டன, ஏனெனில் இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு பெரும் பலனை அளித்தது வருகிறது என்றார்.

இந்த பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சையின் ஆரம்பப் பதிப்பு, கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஹூபே மாகாணத்தைத் தாக்கிய கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது உள்ளூர் பாரம்பரிய சீன மருத்துவ நிபுணர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த மருந்து நான்கு வெவ்வேறு வடிவங்களில் வருகிறது என்று அவர் கூறினார் : 1) எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகளை அதிகரிக்க செய்வது; 2) லேசானது முதல் கடுமையான நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிப்பது; 3) கடுமையான தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பது; 4) நோயாளிகளின் மீட்புக்கு உதவுவது.

பெலாரஸ் நாட்டை தவிர, கன்சு மாகாணம் செப்டம்பர் மாதம் மடகாஸ்கருக்கு 700,000 யுவான் ($109,600) மதிப்புள்ள மருந்து பொருட்களையும், ஆகஸ்ட் மாதம் தாய்லாந்திற்கு 9,000 பாரம்பரிய மருந்து பொருட்களையும் நன்கொடையாக வழங்கியது.

தாய்லாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் சிகிச்சையின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறப்படுவதற்கு பணியாற்றி வருவதாகக் சீன மருத்துவத்தின் கன்சு பல்கலைக்கழகத்தின் இணைந்த மருத்துவமனையின் தலைவர் ஜாங் ஜிமிங் கூறினார்.

மாகாண சுகாதார ஆணையத்தைச் சேர்ந்த ஜின், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை 2013 இல் முன்மொழியப்பட்டதிலிருந்து, பெலாரஸ், மால்டோவா, கிர்கிஸ்தான் மற்றும் ஹங்கேரி உட்பட இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள 12 நாடுகளுடன் கன்சு மாகாணம் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்று கூறினார்.

-அருண் மகாலிங்கம், பெய்ஜிங்.