சினிமா

நல்ல கதைகள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் : கார்த்தி

கார்த்தி நடித்துள்ள கைதி படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. கதாநாயகி, பாடல் இல்லாத படமாக தயாராகி உள்ளது.
கைதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கார்த்தி பேசியதாவது:–

‘‘எனக்கு நல்ல கதைகள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உண்டு. அப்படித்தான் மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்கள் அமைந்தன. மெட்ராஸ் படம் ஒரு சுவரை வைத்து எடுக்கப்பட்டது. ஹாலிவுட்டில் முழு நீள சண்டை படங்கள் அதிகம் வந்துள்ளன. அதுபோன்ற ஒரு முயற்சியாக கைதி படம் தயாராகி உள்ளது.

இந்த படத்தில் 10 வருடம் ஜெயிலில் இருந்து வெளியே வரும் கைதியாக நடித்து இருக்கிறேன். எனது கதாபாத்திரத்தை வித்தியாசமாக வடிவமைத்து உள்ளனர். இது ஒரு இரவில் நடக்கும் கதை. நிறைய சவால்கள் இந்த படத்தில் இருந்தன. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பில் எல்லோரும் கஷ்டப்பட்டனர்.

எனக்கு அதிரடி சண்டை படங்கள் பிடிக்கும். கைதி முழுமையான சண்டை படமாக தயாராகி உள்ளது. கதை மற்றும் காட்சி அமைப்புகள் நேர்த்தியாக இருக்கும்.

இவ்வாறு கார்த்தி பேசினார்.

விழாவில் நடிகர் நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, திருப்பூர் விவேக், ஒளிப்பதிவாளர் சத்ய சிவா, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக் கூடு விசாரணை

dhinasakthi news

வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம் : ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

dhinasakthi news

போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா

dhinasakthi news

Leave a Comment