நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று…!

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,

நாடு முழுவதும் கொடிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் வணக்கம்!!

நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டேன். அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்.

அனைத்து அன்புக்கும் நன்றி..

அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்! என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.