மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

போதைப்பொருள் கூட்டத்தின் தலைவர் பப்லோ எஸ்கோபரின் சகோதரரான ராபர்டோ எஸ்கோபார் ஒரு புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளார். எஸ்கோபார் போல்ட் 1 என்று அழைக்கப்படும் இந்த புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது பிரபல சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போல்ட் ஸ்மார்ட்போன் மூலம் ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த எஸ்கோபார் போல்ட் 1 ஸ்மார்ட்போனானது சந்தையில் உள்ள மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களைப் போலவே ஒரு நெகிழ்வான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மடங்கும் முன் டேப்ளெட் போல காட்சியளிக்கும் இந்த சாதனம் மடக்கிய பின்னர் ஒரு ஸ்மார்ட்போன் அளவிற்கு கைக்கு அடக்கமாக உள்ளது.

ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ராபர்டோ எஸ்கோபார் தனது இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங்கிற்கு எதிராக திருப்பாமல் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக களமிறக்க திட்டமிட்டுள்ளார் மற்றும் அவரின் இந்த திட்டத்திற்கு ஏற்றபடி தான் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் விலை நிர்ணயமும் உள்ளது. டிஜிட்டல் டிரண்ட் அறிக்கையின்படி, எஸ்கோபார் போல்ட் 1 ஸ்மார்ட்போனின் விற்பனையானது, முதலில் 1,00,000 யூனிட்டுகள் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும். இதன் 128 ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.25,100 என்றும், 512 ஜிபி மாடல் ஆனது சுமார் ரூ.35,800 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாகவும், ஆக்டோ கோர் 2.8 ஜிஹெட்ஜ் சிபியூ-வும் பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் குவால்காம் ஸ்னாப்டிராப்டிராகன் 8 சீரிஸ்-ல் இயங்குகிறது. கேமரா வடிவமைப்பை பொறுத்தவரையில் 16 எம்பி முன்புறம், 18+20 எம்பி முன்புறம் என இரண்டு பக்கத்திலும் செல்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டாக மடித்தால் முன்புறம் பக்கம் திருப்பினால் சென்சார் மூலமாக அதுவே தாம் வைத்திருக்கும் பக்கம் ஆன் ஆகி விடும். அதன்படி இரண்டு புற கேமராக்கள் உள்ளது. மற்றும் இரண்டுபுறமும் டூயல் எல்இடி பிளாஸ் வசதி உள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது எஸ்கோபரின் வலைத்தளம் வழியாக பிரத்தியேகமாக விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )