மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் ஏர் டாக்சி

மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் ஏர் டாக்சி

மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இயங்கும் ஏர் டாக்ஸியை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது ஜெர்மனியின் தனியார் நிறுவனம். விமானத்தை போல் இறக்கை, 36 மின்மோட்டார்கள் மற்றும் பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் லிலியம் என்ற நிறுவனம் 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஏர் டாக்ஸியை உருவாக்கியிருந்தது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதும், நேரே மேலே எழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்ஸி, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து சோதனை முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதையடுத்து அதே மாடல் ஏர் டாக்ஸியை உருவாக்கி, 2025ம் ஆண்டுக்குள் வணிக ரீதியிலான சேவையை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கிலும், தடையில்லா சான்று பெறவும் ஐரோப்பிய விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )