போர்சே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் ‘டைகன்’

போர்சே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் ‘டைகன்’

போர்சே நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான டைகனை வாங்குவதற்கு 30 ஆயிரம் பேர் முன்பணம் செலுத்தி காத்து இருக்கின்றனர்.ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக போர்சே, முதன் முறையாக டைகன் என்ற பெயரில் எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. அந்த காரை வாங்க விருப்பம் தெரிவித்து, 30 ஆயிரம் பேர் தலா 2500 யூரோ வீதம் முன் பணம் செலுத்தி உள்ளனர்.

இது தங்களின் எதிர்பார்ப்பை விட அதிகம் என்று அந்நிறுவனத்தின தலைமை செயல் அதிகாரி ஆலிவர் புளும் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள வினியோகஸ்தர்களுக்கு நடப்பு மாதத்திற்குள்ளும், அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு கார்களை விற்பனைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் டைகன் கார்களை தயாரிக்க போர்ஷே நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )