புதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக்

புதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் பொதுபார்வைக்கு வந்துள்ளது. நீண்ட தூர பயணம், ஆப்ரோடு சாகசம் என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற மூர்க்கத்தனமான ஒரு பைக் மாடலாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் இருக்கும் என நம்பலாம். கேடிஎம் 390 டியூக் பைக்கின் பல முக்கிய உதிரிபாகங்களை இந்த பைக் பங்கிட்டுக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் அட்வென்ச்சர் டூரர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கேடிஎம் 390 டியூக் பைக்கின் அதே இயக்க நிலைகளுடன் இந்த பைக் வந்துள்ளது.

இன்ஜினில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் முன்புறத்தில் 43 மி.மீ அப்சைடு டவுன் போர்க், பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளன. கேடிஎம் 390 டியூக் பைக்கின் முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன்களைவிட இந்த பைக்கின் சஸ்பென்ஷன் கூடுதல் டிராவல் நீளம் கொண்ட போர்க்குகளுடன் வந்துள்ளது. கேடிஎம் 390 டியூக் பைக்கைவிட இந்த பைக்கின் வீல் பேஸ் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 1,43 மி.மீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மி.மீ ஆக உள்ளது.

இந்த பைக்கின் முன்புறத்தில் 100/90-19 அளவுடைய டயரும், பின்புறத்தில் 130/80-17 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் டிஎப்டி திரையுடன்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டிரைவிங் மோடுகளை இந்த சாதனம் மூலமாக கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு தகவல்களையும் பெற முடியும்.நம் நாட்டில் இப்புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக், நீ ண்ட காலமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் கோவாவில் நடைபெற இருக்கும் ‘இந்திய பைக் வீக்’ திருவிழாவின் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ₹3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )