பட்ஜெட் விலையில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்: டெக்னோ நிறுவனம் அறிமுகம்

பட்ஜெட் விலையில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்: டெக்னோ நிறுவனம் அறிமுகம்

டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாப் நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் டெக்னோவின் ஹை ஒ.எஸ். 5.5 இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் பவரின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

டெக்னோ ஸ்பார்க் பவர் சிறப்பம்சங்கள்:

– 6.35 இன்ச் 720×1548 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் டெக்னோவின் ஹை ஒ.எஸ். 5.5
– டூயல் சிம்
– 13 எம்.பி. கேமரா, f/2.0
– 8 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் டான் புளூ மற்றும் ஆல்ஃபென் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை டிசம்பர் 1ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )