தண்ணீரில் சைக்கிள்

தண்ணீரில் சைக்கிள்

இத்தாலியின் எஸ்.பி.கே., இன்ஜினியரிங் நிறுவனம், சாதாரணமான சைக்கிளை, தண்ணீரில் இயக்கும் ஜெட் ஒன்றை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. தண்ணீரில் மிதக்கும் வகையிலான காற்றடைத்த பலுான் போன்ற ஜெட் ஒன்றில், சைக்கிள் இணைக்கப்படுகிறது. 15 நிமிடங்களில் சைக்கிளை, இந்த ஜெட்டுடன் இணைத்து விட முடியும். இதன் பின் நாம் சைக்கிள் பெடலை இயக்கினால், தண்ணீரில் நகர்ந்து செல்கிறது. இது தண்ணீரில் அதிகபட்சமாக மணிக்கு 11 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. சராசரி வேகம் மணிக்கு 4 கி.மீ. இதன் விலை ரூ. 1.11 லட்சம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )