டெக் புதுசு

டெக் புதுசு

இரைச்சலைத் தவிர்க்கும் ஹெட்போன்

எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் நீங்கள் விரும்பும் இசையுடன் இசையாக கலக்க விரும்புகிறீர்களா? அப்படி யென்றால் உங்களுக்கான ஹெட்போன் இது. ஆம்; இதிலிருக்கும் இரைச்சலைத் தவிர்க்கும் வசதி பாடலையும் இசையையும் துல்லியமாக நம் காதுகளுக்குக் கடத்துகிறது.ரயிலின் சத்தம் கூட தொந்தரவு செய்வதில்லை. ‘சென்ஹைசர்’ நிறுவனம் இந்த போனை தயாரித்திருக்கிறது. விலை ரூ.15,000.

ஐபேட்

மினி கம்ப்யூட்டர் போல இயங்குகிறது ஆப்பிளின் புதிய ஐபேட். டச் ஸ்க்ரீன் வசதியிருந்தாலும் கூட, கீபோர்டையும் இதனுடன் இணைத்துக்கொள்ள முடியும். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்ல முடியும். நாள் முழுக்க நிற்கும் சார்ஜ், ஸ்டைலான வடிவமைப்பு, ஸ்மார்ட்போனைப் போல இயங்கும் திறன் என கெத்து காட்டுகிறது இந்த ஐபேட். விலை ரூ.28 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )