டெக் புதுசு

டெக் புதுசு

சவுண்ட் பார்

ஸ்மார்ட் டி.விகளில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. அதன் பிக்சரின் தரம் கூட 4k, ஹெச்.டி.ஆர், ஃபுல் ஹெச்.டி என்று அப்டேட் ஆகிவிட்டது. ஆனால், டிவியின் சவுண்ட் சிஸ்டத்தில் மட்டும் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இந்தத் தேவையைப் புரிந்துகொண்ட ‘ஷியோமி’ நிறுவனம், ஸ்மார்ட் டி.விகளுக்காக பிரத்யேகமான சவுண்ட் பார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. விலை ரூ.4,999.

ஏர் குவாலிட்டி மானிட்டர்

உலகம் முழுவதும் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த வருடம் மட்டுமே காற்று மாசுபாட்டின் காரணமாக 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் காற்றின் தரம், அதன் ஈரப்பதம், அதில் கலந்துள்ள மாசுக்கள் பற்றிய தகவல்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள ‘ஏர் குவாலிட்டி மானிட்டர்’ என்ற ஒரு கருவி வந்துவிட்டது.

இதற்கென்று பிரத்யேகமாக ஒரு ஆப் உள்ளது. அதை டவுன்லோடு செய்து ஸ்மார்ட்போனில் இணைத்துவிட்டால் போதும். நாம் எங்கு இருக்கிறோமோ அந்த இடத்தில் வீசும் காற்று எத்தகையது என்பதை நாம் அறிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )