சென்ஹெய்சர் வயர்லெஸ் ஹெட்போன்

சென்ஹெய்சர் வயர்லெஸ் ஹெட்போன்

வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களை இப்போது அதிகளவு மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர், எனவே வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களை விரும்பும் இந்திய மக்களுக்கு சென்ஹெய்சர் நிறுவனம் மொமன்ட்டம் வையர்லெஸ் 3 ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக இந்த புதிய ஹெட்போனில் மூன்று ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட்களும், டிரான்ஸ்பேரண்ட் ஹியரிங் அம்சமும்இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் உள்ள ஸ்பீக்கர் சிஸ்டம் 42எம.எம் டிரான்டூசர்களால் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சாதனத்தில் ஆன், ஆஃப் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால், ஹெட்போனினை திறக்கும் போது அது தானாக ஆன் ஆகிவிடும்

அதேபோல் ஹெட்போனினை மடிக்கும் போது தானாக ஆஃப் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.சென்ஹெய்சர் நிறுவனத்தின் இந்த ஹெட்போன் மாடலில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், ஹெட்போன் காதில் இருந்து எடுத்ததும், பாட்ல் நிறுத்தப்பட்டு விடும்,பின் காதில் வைத்ததும் பாட்டு இயங்க துவங்கும்.இந்த அம்சங்களை தவிர வாய்ஸ் அசிஸ்டண்ட் அமசத்தை இயக்க ஹெட்போனில் பிரத்யே பட்டனம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மொமண்ட்டம் வயர்லெஸ் 3 ஹெட்போன் மாடல் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த சாதனத்தின் விலை என்னவென்றால் ரூ.34,990-ஆகும்.இதற்கு முன்பு சென்ஹெய்சர் நிறுவனம் மொமண்ட்டம் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதன் விலை ரூ.24,990-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொமண்டம் ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் மாடலை தொடர்ந்து நான்கு மணி நேரம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )