கொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்…!

கொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்…!

கொரோனா தொற்றுநோய் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான அடிப்படை சோதனைகளை ஆன்லைனில் முன்னெடுக்கும் வகையிலான இணையதளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இணையதளத்தை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கூகுள் வடிவமைத்திருக்கிறது. https://www.projectbaseline.com/study/covid-19/ என்ற இணையதளத்திற்குள் நுழைந்தால், முதலில், தீவிர இருமல், சளி தொந்தராவால் அவதிப்படுகிறீர்களா? அல்லது, முச்சுவிடுதல் சிரமம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதில், கொரோனா அறிகுறி இருப்பவர்கள், உடனடியாக, கலிபோர்னியா மாகாணத்தில், குறிப்பிட்ட 2 மாவட்டங்களில், நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தின் மூலம், தொற்றுநோயை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள கூகுள் இணையதளம் வழிகாட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )