ஒலியை விட வேகமாகப் பறக்கும் புதிய சூப்பர்சானிக் விமானம் தயாரிக்க நாசா முடிவு

ஒலியை விட வேகமாகப் பறக்கும் புதிய சூப்பர்சானிக் விமானம் தயாரிக்க நாசா முடிவு

ஒலியை விட வேகமாகப் பறக்கும் கான்கார்டு விமானத்தின் புதிய மாடல்களைத் தயாரிக்க நாசா முடிவு செய்துள்ளது.சன் ஆஃப் கான்கார்டு என்ற பெயரில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் மூலம் தற்போது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமான பயணத்தின் நேரம் பாதியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸ் 59 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 55 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

ஒலியை விட வேகமாகப் பறக்கும் போது ஏற்படும் சோனிக் பூம் எனப்படும் காற்றின் வெடிப்புச் சப்தம் மிகக் குறைந்த அளவிலேயே சன் ஆஃப் கான்கார்டில் இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. 40 இருக்கைகள் கொண்டதாக தயாரிக்கப்படும் இந்தவகை விமானத்தை அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. முதலாவது விமானம் வரும் 2021ம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )