ஒரே சார்ஜ்ஜில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி: சாம்சங் அறிமுகம்

ஒரே சார்ஜ்ஜில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி: சாம்சங் அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவிற்கு முன்னரான சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் ஒரு முறை சார்ஜ் செய்தில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது. ஆனால் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் அவை குறைந்தளவு நேரத்திற்கே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய Galaxy S10 Lite எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக்கைப்பேசியில் வழமைக்கு மாறாக 4500mAh கொண்ட மின்கலம் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீண்ட நேரம் கைப்பேசிக்கு சார்ஜினை வழங்கக்கூடியதாக இருக்கும். தவிர பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் Qualcomm Snapdragon 855 mobile processor என்பனவும் குறித்த கைப்பேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )