தொடர்ச்சியான இயக்கமே சிபிசி-யின் வெற்றிக்குக் காரணம்

அமெரிக்காவுக்கு அடுத்த பெரிய பொருளாதார நாடு என்ற தகுநிலையைச் சீனா பெற்றுள்ளதற்கு
பல காரணங்கள் இருப்பினும், ஆட்சியை வழிநடத்திச் செல்லும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே
பிராதான காரணமாகும். மக்கள் சார்ந்த ஒரு திட்டம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம்
சென்றடைவதற்கு சில ஆண்டுகள் தேவைப்படும். நல்ல கொள்கைகளை வெற்றிகரமாக
நிறைவேற்றி முடிக்க ஒரு நாட்டுக்கு நிரந்தரமான ஆட்சி தேவைப்படுகிறது. அது, சீனாவில்
உள்ளது.
சமீபத்தில், சிபிசி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு வெகு சிறப்பாக சீனாவில்
கொண்டாடப்பட்டது. 19ஆவது மத்தியக் கமிட்டியின் 6ஆவது முழு அமர்வில் இந்த நூறு
ஆண்டுகளில் சிபிசியால் சீனாவில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சாதனைகள் பட்டியலிடப்பட்டு
உலகுக்குத் தெரிவிக்கப்பட்டன. பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் தீட்டப்படும் ஒரு திட்டம்
கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் வெற்றிகரமாக நடைமுறைக்கு வருகிறது என்றால்
அதற்கு சிபிசி உறுப்பினர்களே முக்கியக் காரணம்.
மேலை நாடுகளின் தனிமைப்படுத்துதல், வளர்ச்சியைத் தடுத்தல் என பல அறைகூவல்களைச்
சீனா சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், திடமான ஆட்சி மற்றும் வலுவான கொள்கைகளால்
சீனா தொடர்ந்து வளர்ந்து வருவதுடன், மற்ற நாடுகளுக்கும் இயன்ற உதவிகளை அளித்து
வருகிறது. அதற்கு, கொவைட்-19 நோய்த்தடுப்புப் பொருள் உதவியே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உலகப் பொது எதிர்கால சமூகம் என்ற புதிய கொள்கைகளுடன் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்
தலைமையிலான சீனா தனது பயணத்தை மிடுக்காக மேற்கொண்டு வருகிறது. ஷிச்சின்பிங்,
புதிய யுகத்தில் சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் என்ற சிந்தனையை முன்மொழிந்தார்.
இத்தகைய கொள்கைகள்தான் தீவிர வறுமையை முழுமையாக வெற்றி கொள்வதற்குச் சீனாவுக்கு
உதவி புரிந்துள்ளன. குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப் படைக்கும் பாதையில் சீனா
பயணித்துச் செல்வதற்கும் அதுவே காரணமாக உள்ளது.
சிபிசி-யின் தொடர்ச்சி, புதிய யுகத்தில் சீனப் பண்புகளுடன் கூடிய சோஷலிசத்தின் கீழ் கட்சியின்
வரலாற்றுப் பாதை, கோட்பாடுகள், அமைப்புகள் மற்றும் கலாச்சாரத்தைச் சீனா வகுத்துள்ளது.
திறப்புக் கொள்கையின் மீது சீனா ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளது. வெவ்வேறு துறைகளில்
தனது திறப்பை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மூலம் சீனா
தனது இரண்டாவது நூற்றாண்டு இலக்கை எட்டும் என்பதில் ஐயமில்லை. இவை அனைத்துக்கும்
சீனாவில் தொடர்ச்சியாக இருந்து வரும் சிபிசி ஆட்சியே காரணமாகும்.
-பாண்டுரங்கன், பெய்ஜிங்.