“தலைவர்களின் ஜனநாயக உச்சிமாநாட்டில்” தைவான் பங்கேற்புக்குச் சீனா எதிர்ப்பு

“தலைவர்களின் ஜனநாயக உச்சிமாநாட்டில்” பங்கேற்க தைவான் அதிகார வட்டாரத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று 24ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சீன மக்கள் குடியரசு, சீனா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாகும். சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதைத் தவிர, தைவானுக்குப் பிற சர்வதேச சட்ட தகுநிலை இல்லை. ஜனநாயகம் என்பது, அனைத்து மனிதக் குலத்தின் பொதுவான மதிப்பாகும். ஒரு சில நாடுகளின் சிறப்பு உரிமம் அல்ல என்றார்.